
துல்கர் சல்மானை தொடர்ந்து கமல் படத்தை விட்டு வெளியேறிய ஜெயம் ரவி
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் செர்பியாவில் நடைபெற்றது. தற்காலிகமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கால்ஷீட் பிரச்னையால் ஏற்கனவே இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் வெளியேறினார். அவரைப்போலவே இப்போது ஜெயம் ரவியும் கால்ஷீட் பிரச்னையால் இந்த படத்தை விட்டு தற்போது வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தல் காரணமாக கமல் பிரச்சாரத்திற்கு கிளம்ப உள்ளார். இதனால் இதன் படப்பிடிப்பு தாமதம் ஆகும் என தெரிகிறது. இதனாலயே ஜெயம் ரவி வெளியேறிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், இது குறித்து எந்த வித உறுதியான தகவல் வெளியிடவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!