சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் | நடிகர் ரகுநாத் மாரடைப்பால் காலமானார் | மீண்டும் தாத்தாவான நடிகர் சிரஞ்சீவி! | சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! | 'அசுரன்' பட பாடலுக்கு கிடைத்த விருது: ஜி.வி.பிரகாசுக்கு நன்றி சொன்ன பாடகி சைந்தவி! | மீண்டும் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்? | சூர்யாவின் 'கர்ணா' கைவிடவில்லை! - இயக்குனர் தகவல் | 94வது வயதில் 61வது படத்தை அறிவித்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்! | '7ஜி ரெயின்போ காலனி 2' படம் குறித்து பகிர்ந்த அனஸ்வரா ராஜன்! | இயக்குனராக மாறும் பிரபல எழுத்தாளர்! |

2023ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் இன்னும் சில தினங்களில் வர உள்ளது. மாதத்தின் முதல் நாளே வெள்ளிக்கிழமையாக இருப்பதால் அன்றைய தினமே புதிய படங்கள் வெளியாக உள்ளன. அன்று இதுவரை வந்த அறிவிப்புகளின்படி 5 படங்கள் வெளியாகின்றன.
“அன்னபூரணி, நாடு, பார்க்கிங், வா வரலாம் வா, சூரகன்” ஆகிய படங்கள் வெளியாகப் போகின்றன. கடந்த வாரம் வெளியாகாத 'துருவ நட்சத்திரம்' படம் வெளியாகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.
2023ம் ஆண்டின் கடைசி வெள்ளியான கடந்த வாரம் வரை, 208 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் சுமார் 25 படங்கள் வரை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1ம் தேதி வெளியாக உள்ள படங்களில் நயன்தாராவின் 'அன்னபூரணி' படம் மட்டுமே முன்னணி நட்சத்திரம் நடித்து வெளிவர உள்ள படம். நயன்தாரா தனி கதாநாயகியாக நடித்து கடைசியாக வெளிவந்த “நெற்றிக்கண், ஓ 2, கனெக்ட்” ஆகிய படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. அந்தக் குறையை 'அன்னபூரணி' மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.