தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

திறமைகள் பல இருந்தும் அதிகம் பேசப்படாத நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். இசையமைப்பது, பாடுவது, நடிப்பது என அப்பா கமல்ஹாசனைப் போலவே பன்முகத் திறமை கொண்டவர். அவரது திறமையை இந்தியத் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தது.
'சலார்' படத்தின் மூலம் அந்தக் குறை தீரும் என எதிர்பார்க்கலாம். பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வந்த போதே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். பல வருடங்களாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்காத நடிகையாக ஸ்ருதி இருந்ததே அதற்குக் காரணம்.
'சலார்' படத்தில் ஸ்ருதியின் திறமைகளை இயக்குனர் பிரசாந்த் நீல் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்பதற்கு ஒரு உதாரணத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி. ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள அப்படத்திற்காக அந்த ஐந்து மொழிகளிலும் அவரே சொந்தக் குரலில் டப்பிங் பேசி வருகிறார். மூன்று மொழிகளில் டப்பிங் பேசி முடித்துவிட்டாராம், இன்னும் இரண்டு மொழிகளில் பேச வேண்டுமாம். இந்த ஒரு திறமைக்காகவே ஸ்ருதிக்கு ஒரு தேசிய விருது வழங்கலாம். நோட் பண்ணிக்குங்க ஜுரிஸ்….