
பிராஜெக்ட் கே படத்தின் டைட்டில் அப்டேட்
ஜூன் 23, 2023
Advertisement
ஆதி புருஷ் படத்திற்கு பின் பிரபாஸ் கைவசம் சலார், பிராஜெக் கே, மற்றும் இன்னும் இரண்டு படங்கள் என அடுத்தடுத்து கைவசம் உள்ளன. இவற்றில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி படம் ப்ராஜெக்ட் கே. பிரபாஸ் உடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் கமல்ஹாசன் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. சயின்ஸ் பிக்ஷன் கலந்த படமாக எடுக்கின்றனர். இந்த படத்தின் தலைப்பு உடன் கூடிய மோஷன் போஸ்டரை வருகிற ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் பிரமாண்டமாக விழா நடத்தி வெளியீட படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிராஜெக்ட் கே என்பது தற்காலிக தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!