திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி | மலையாளத்தில் அறிமுகமாகும் இர்பான் கான் மகன் | துரந்தர் 3 பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட சூசக தகவல் | பிரபாஸ், அல்லு அர்ஜூன் வழியில் சந்தீப் | 'சிட்டாடல்' 2வது சீசன் வெளியானது | இசை ஆல்பத்தில் திரிஷா : பால் டப்பாவுடன் ஆட்டம் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஜெயிக்க முடியாத அன்னை இல்லத்து வாரிசு | பிளாஷ்பேக் : வீட்டை விற்று விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுத்த நடிகர் |

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் 1 படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. படத்தின் ரிலீஸ்க்கு முன்பே ரூ.70 கோடி வரை அவரது படத்திற்கு இப்போது பிஸினஸ் நடைபெறுகிறதாம். இதைதொடர்ந்து தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளாராம் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திலே ரூ.25 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். இனிவரும் படங்களிலும் இன்னும் சம்பளம் உயரும் என கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து அவர் நடிப்பில் இறைவன், சைரன் திரைப்படம் இந்த வருடமே வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் படத்திலும் நடித்து வருகிறார். ஜெயம் ரவி விரைவில் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக இருக்கிறது. இதையடுத்து அவர் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.