
37 ஆண்டுகளுக்கு பின் ‛பி.டெக் டிகிரியை வாங்கிய ராம்கோபால் வர்மா
ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் 1985ல் சிவில் இன்ஜினியரிங்கில் பி டெக் படிப்பை முடித்தார் ராம்கோபால் வர்மா. ஆனால் தொடர்ந்து, படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்க விருப்பம் இல்லாமல் சினிமாவில் நுழையும் ஆர்வத்தில் இருந்ததால் தனது டிகிரி சான்றிதழை இதுவரை வாங்காமலேயே இருந்தார் ராம்கோபால் வர்மா. இந்த நிலையில் தற்போது பல்கலைக்கழகத்திற்கு நேரிலேயே சென்று அந்த பட்டத்தை பெற்றுள்ளதுடன் அதுகுறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!