மகேஷ்பாபு குடும்பத்தினருடன் தியேட்டர் விசிட் அடித்த பிரியங்கா சோப்ரா | மூன்றே மாதங்களில் 150 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'பாரடைஸ்' படத்தின் 'ஆயா ஷேர்' பாடல்! | விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் |

விஜய் ஆண்டணி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் படம் ‛பிச்சைக்காரன் 2'. சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதனை சசி இயக்க மறுத்துவிட்டதால் விஜய் ஆண்டனியே இயக்குகிறார். இந்த படத்தின சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நெட் ஒர்க் நிறுவனம் கணிசமான தொகைக்கு வாங்கி உள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி கூறியதாவது: ஸ்டார் விஜய் போன்ற மதிப்புமிக்க மிகப்பெரிய நிறுவனத்தில் இந்தப் படம் சேர்ந்திருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.




