பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்திற்கு ‛அப்பா குட்டி' என பெயரிட்டுள்ளனர். மு மாறன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடிக்க, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியே இசையமைக்கிறார். தந்தை - மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது. குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.