
சபதத்திற்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஈரம் கூட்டணி
கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஈரம் படத்தில் இயக்குனராக அறிமுகமான அறிவழகன், அந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆதிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை பெற்றுத் தந்தார். இந்த நிலையில் தற்போது சபதம் படத்திற்காக இவர்கள் இணைந்து உள்ளனர். இந்தப்படத்தின் துவக்க விழா பூஜை நேற்று நடைபெற்றது.
அதுமட்டுமல்ல ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமனும் இந்த சபதம் படத்திற்காக இவர்களுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் கதைக்கு ஆதி தான் சரியான நபராக இருந்தார்.. அருண்விஜய்க்கு அடுத்ததாக ஆதியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ரொம்பவே வசதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அறிவழகன். இந்த படம் ஹாரர் திரில்லர் ஆக உருவாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!