பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
சின்னத்திரை நடிகையான அக்ஷிதா போபைய்யா தற்போது 'கண்ணான கண்ணே' தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். பெங்களூரை சேர்ந்த அக்ஷிதா பிரபல மாடலும் ஆவார். இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கு ஹார்டின்கள் மழையாக பொழியும்.
இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் வெள்ளித்திரை கதவும் திறந்துள்ளது. தற்போது தமிழ், கன்னடம் என இரண்டு திரையுலகிலும் கவனம் செலுத்தி வரும் அக்ஷிதா தமிழில் 'ஆக்ஸிஜன் தந்தாலே' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், கூடுதல் தகவல் என்னவெனில் 'கண்ணான கண்ணே' தொடரில் வில்லனாக நடித்து வரும் சித்தார்த் கபிலவாயி தான் படத்தின் ஹீரோவாக நடித்துள்ளார். சீரியலில் சண்டை போடும் இவர்கள் சினிமாவில் ஜோடியாக நடித்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். அக்ஷிதாவின் திரைப்பயணம் வெற்றியடைய வேண்டும் எனவும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.