தொடர்கிறது…. மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி | 'காந்தாரா' தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி இடையே மோதல்? | இசையமைப்பாளரான இயக்குனர் : நடிகரான பிரபுதேவா மகன் | துணிச்சலான காவல்துறை அதிகாரி வேடத்தில் சம்யுக்தா! | ஓடிடியில் வெளியானது அர்ஜுனின் சீதா பயணம்! | யோகி பாபுவின் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! | 'துரந்தர் தி ரிவெஞ்ச்' மற்ற மொழி தணிக்கை தாமதம் | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..! | பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்” | கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்? |

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற 13ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. இந்த படம் யோகி பாபு நடித்த கூர்கா மற்றும் சில ஹாலிவுட் படங்களின் சாயல் இருக்கிறது. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுபற்றி நெல்சன் அளித்துள்ள பதில் வருமாறு: பொதுமக்கள் அதிகம் நடமாடும் ஒரு ஷாப்பிங் மாலை ஹைஜாக் செய்யும் கதை ஒன்றும் சினிமாவுக்கு புதிதில்லை. பல படங்கள் வந்திருக்கிறது. ஆனால் சொல்லப்படும் விதத்திலும், காட்சிகள் உருவாக்கத்திலும் அவை வேறுபடும். இந்த மாதிரியான கதைகளில் சில காட்சிகள் ஒரே மாதிரி வருவதும் தவிர்க்க முடியாது. நானும் கூர்கா படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மணி ஹெய்ஸ்ட் தொடருக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.
பொதுவாக என்னுடைய டிரைலர்கள் ஒரு மாதிரியாகவும், படங்கள் வேறு மாதிரியாகவும் இருக்கும், டிரைலரில் வரும் காட்சிகளை வைத்து படத்தை தீர்மானிக்க முடியாது. யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை. படம் பார்க்கும்போது அதனை உணர்வார்கள்.
விஜய் என்னை அழைத்து எனக்கு ஒரு கதை பண்ணுங்கள் என்று கூறிய பிறகு அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் இது. ஆனாலும் அவரது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். அவரது ரசிகர்களை திருப்பதி படுத்துவதாகவும் இருக்கும். எனது படங்கள் பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்களாக இருக்கும். இதுவும் அந்த மாதிரியா ஒரு படம். என்றார்.




