மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி | ஹீரோக்களை ஓரங்கட்டிய பிசாசு நடிகை | அரசியல்: கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் | பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் | கார்த்திக் ஆரியனுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! - ராஷி கண்ணா வெளியிட்ட தகவல் | 'பெத்தி' படம் பார்க்க ஹைதராபாத் கிளம்பி வந்த ஜப்பானிய ரசிகைகள் | நடிகர் உன்னி முகுந்தன் புகாரின் பேரில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் அதிரடி கைது | சிரஞ்சீவி படத்தில் இணைந்த ரக்ஷிதா ராம் |

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‛வலிமை' திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு திருப்தியை அளித்து உள்ளது என்றாலும் வெகுஜன ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்றே கருதப்படுகிறது. இந்தநிலையில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் அஜித் படத்தை இயக்குகிறார் இயக்குனர் வினோத். இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதற்காக ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இந்தப்படத்தில் இணைந்துள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
வலிமை படத்தை போல அல்லாமல் புதுமாதிரியான சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற இருக்கிறதாம். வலிமை படத்தில் திலீப் சுப்பராயன் மாஸ்டர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருந்தார். அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பும் கிடைத்தது.. ஆனால் அஜித் 61 படத்தில் பணியாற்ற இவரால் கால்ஷீட் கொடுக்க முடியில்லையாம். அதனால் தான் இந்த படத்தில் வேறுவிதமான சண்டைக் காட்சிகளை வடிவமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் சண்டை பயிற்சியாளரை தற்போது மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.