Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க தேர்தல் : நாசர் - விஷால் அணி வெற்றி ; தில்லு முல்லு என எதிரணியினர் குற்றச்சாட்டு

20 மார், 2022 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Vishal-team-won-in-Nadigar-Sangam-Election

சென்னை : மூன்றாண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை இன்று(மார்ச் 20) நடந்தது. இதில் நாசர் தலைமையில் போட்டியிட்ட விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பாண்டவர் அணியினர் வெற்றி பெற்றனர். அதேசமயம் இந்த ஓட்டு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்திருப்பதாக கூறி எதிரணியனரான பாக்யராஜ் அணி குற்றம்சாட்டி உள்ளனர்.


வழக்கு
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும் போட்டியிட்டனர். ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தலை செல்லாது என்ற அறிவித்த நீதிமன்றம் வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தது. இதை தொடர்ந்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.


தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.


மூன்றாண்டுகளுக்கு பின் ஓட்டு எண்ணிக்கை
இந்த நிலையில் இன்று (மார்ச் 20) சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இந்த ஓட்டு எண்ணிக்கை தேர்தல் அதிகாரி, நடிகர் சங்க தனி அதிகரி மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பாண்டவர் அணி வெற்றி
நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்றுள்ளார். இந்த அணியை சேர்ந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன்(1612 ஓட்டுகள்), கருணாஸ்(1605 ஓட்டுகள்) ஆகியோரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குற்றச்சாட்டு

முன்னதாக ஓட்டு எண்ணிக்கையின் போது பாக்யராஜ் தலைமையிலான அணியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். பதிவான ஓட்டுகளை விட ஓட்டு எண்ணிக்கையின் போது கூடுதல் ஓட்டு உள்ளதாக பாக்யராஜ் அணியினர் குற்றம் சாட்டினர். இதனால் ஓட்டு எண்ணிக்கை சிறிதுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தேர்தல் அதிகாரி ஏற்காததால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறினர். இந்த தேர்தலில் 100க்கும் அதிகமான ஓட்டுகள் கூடுதலாக உள்ளதாகவும், ஓட்டு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்திருப்பதாகவும் பாக்யராஜ் அணியினர் குற்றம் சாட்டினர்.
அணியினர் பெற்ற ஓட்டு எண்ணிக்கை விபரம்:
தலைவர்கள்:
திரு: நாசர்: - 1701
திரு: பாக்கியராஜ்: - 1054

துணை தலைவர்கள்:
திரு: கருணாஸ்: -1605
திருமதி: குட்டி பத்மினி: - 1015
திரு: பூச்சி முருகன்: - 1612
திரு: உதயா:- 973
பொருளாளர்:

திரு: Si. கார்த்தி:-1827
திரு: பிரசாந்த்:- 915

பொது செயலாளர்;

திரு: ஐசரி கணேஷ்:1032திரு: விஷால்: -1720

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வாடிவாசல் படப்பிடிப்பு ஒத்திகையில் சூர்யா, வெற்றிமாறன்வாடிவாசல் படப்பிடிப்பு ஒத்திகையில் ... ராதே ஷ்யாம் : பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த ஆறுதல் ராதே ஷ்யாம் : பூஜா ஹெக்டேவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

S.Baliah Seer - Chennai,இந்தியா
21 மார், 2022 - 13:36 Report Abuse
S.Baliah Seer நேர்மையாக தேர்தல் நடந்து வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான்.அதே சமயம் பாக்யராஜ் அவர்கள் சொன்ன ஒரு குற்றச்சாட்டுக்கு இதுவரை எத்தரப்பில் இருந்தும் பதிலோ ,விளக்கமோ தரப்படவில்லை."பதிவானா வாக்குகளைவிட ,எண்ணிக்கையின் போது அதிக வாக்குகள் வந்தது எப்படி" என்பதே பாக்யராஜின் குற்றச்சாட்டு.
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
21 மார், 2022 - 12:54 Report Abuse
சீனி சங்கத்துக்கு வந்ததும் ஹீரோ வில்லனாயிடுவாரு, வில்லன் ஹீரோவாகிவாரு... ஹாஹாஹா.... இவங்க ஜெயிச்சா ரேசன் கார்டுக்கு ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து கிடைக்குமா, எல்லோரும் போய் பிழைப்பை பாருங்க.... ரோட்டுல போய் பிச்சையெடுக்குற ஏழை நடிகர்களை கொஞ்சம் அப்படியே பாருங்க ஐயா, சாமி....
Rate this:
K.SANTHANAM - NAMAKKAL,இந்தியா
21 மார், 2022 - 07:25 Report Abuse
K.SANTHANAM தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து தமிழ்(தமிழ்நாடு) நடிகர்கள் வெளியேறுங்கள்.
Rate this:
mukundan - chennai,இந்தியா
21 மார், 2022 - 10:21Report Abuse
mukundanப்ரோ, எந்த காலத்தில இருக்கீங்க. இப்போ இருக்கிறது வெறும் தமிழ் நடிகர்கள் தான். மற்ற மொழி நடிகர்கள் எப்போதோ தனியாக அவர்கள் மாநிலத்தில் சங்கம் தொடங்கி போய்ட்டாங்க. இப்போ பேரு மட்டும் தான் மிஞ்சி இருக்கு....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in