பிளாஷ்பேக்: செவிக்கு விருந்தளித்து, விழிக்கு விருந்தளிக்காமல் போன கே பாக்யராஜின் “காவடிச் சிந்து” | வெளியான உடன் ஹிட்டான 'பெத்தி' படத்தின் அதிரடி கிளாமர் பாடல் | முதல் வார இறுதியில் 140 கோடி வசூலித்த 'திரிஷ்யம் 3' | டிக்கெட் விலை அதிகரிக்கணும் : விஜய்சேதுபதிக்கு கண்டனம் | இந்த வாரம் சில படங்கள் மட்டுமே ரிலீஸ்…. | பிளாஷ்பேக் : தியேட்டரில் வெளியாகாத பாலுமகேந்திரா படம் | பிளாஷ்பேக்: சிறுபட்ஜெட் படங்களுக்கு தனி நிறுவனம் தொடங்கிய மார்டன் தியேட்டர்ஸ் | ரிலீசுக்கு தயாரான ரோபோ சங்கர் நாயகனாக நடித்த கடைசி படம் | சத்யன் அந்திக்காடு உடன் மீண்டும் இணைந்த மோகன்லால் | 18ம் படி கருப்புக்கு 18 அடி அரிவாள் : ஆர்.ஜே.பாலாஜி காணிக்கை |

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‛விருமன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தில் தேன்மொழி என்னும் கதாபாத்திரத்தில் தைரியம் மிகுந்த பாசக்கார மதுரைப் பெண்ணாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா - ஜோதிகா இணைந்து 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இப்படத்தை ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.




