
அடுத்த ஆண்டு 11 வெப் சீரிஸ்களை வெளியிடுகிறது மார்வெல் நிறுவனம்
தற்போது வெப் சீரிஸ் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. வாண்டாவிஷன், லோகி, பால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட தொடர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. அடுத்ததாக "ஹாக் ஐ" வெப் தொடர் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு 11 வெப் சீரிஸ்களை வெளியிடப்போவதாக அறித்து அந்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மூன் லைட், அகதா: ஹவுஸ் ஆப் டார்க்னெஸ், அயர்ன்ஹார்ட், ஸ்பைடர்மேன் - ப்ரெஷ்மேன் இயர், மார்வெல் ஸாம்பீஸ், மிஸ்.மார்வெல், ஷி ஹல்க், எக்கோ, எக்ஸ் - மென் 97, சீக்ரெட் இன்வேசன், ஐயாம் க்ரூட், வாட் இஃப் சீசன் 2 ஆகியவையே அந்த தொடர்கள். இவற்றில் பெரும்பாலானவை அனிமேஷன் தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!