பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள சமந்தா, தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக தமிழ், தெலுங்கில் தயாராகும் இரண்டு படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஹிந்தியில் டாப்சி தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார் சமந்தா.
மேலும் சோசியல் மீடியாவில் தன்னுடைய போட்டோ, வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் சமந்தா, தற்போது தான் அதிரடி ஆட்டம் போடும் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை சமந்தாவின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரலாக்கி வருகிறார்கள். அதோடு, குழந்தைகள் தினமான இன்று குழந்தைகள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள சமந்தா, குழந்தைகள் தின வாழ்த்துக்கள். நமது நாட்டின் எதிர்காலம் ஒளிமயமானது என்றும் பதிவிட்டுள்ளார்.