
ராம்கோபால் வர்மாவின் டார்கெட் சிரஞ்சீவியா ? அல்லு அர்ஜுனா ?
இதை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள வர்மா, “.அல்லு அர்ஜுனின் புத்திசாலித்தனம் என்பது அவர் சிரஞ்சீவி போன்றவர்களின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்வதில் இல்லை. ஏனென்றால் அவர் தானே சுயம்புவாக தன்னை உருவாக்கி கொண்ட நட்சத்திரம்.. அதனால் பவன் கல்யான், வருண் தேஜ், ராம்சரண் போல சிரஞ்சீவியின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள கூடாது. காமெடி நடிகர் அல்லு ராமலிங்கையாவின் பேரனாக இருந்து சிரஞ்சீவியின்" குடும்ப வாரிசுகளை எதிர்த்து வெற்றி பெற்றிப்பது தான் உண்மையான வெற்றி.. அந்தவகையில் ஒரிஜினல் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு பிறகு இப்போதைய மெகாஸ்டார் அல்லு அர்ஜுன் தான் ” என கூறியுள்ளார்..
உண்மையிலேயே அல்லு அர்ஜுனை புகழ்கிறாரா..? இல்லை, சிரஞ்சீவியின் மைத்துனர் மகன் என்கிற அடையாளத்துடன் சினிமாவில் வளர்ந்த அல்லு அர்ஜுன் சிரஞ்சீவியின் பிறந்தநாளை கூட ஒரு பொருட்டாக மதிகவில்லையே என குத்திக்காட்டுகிறாரா...? இது உண்மையிலேயே புகழ்ச்சியா அல்லது கிண்டலா என்பது அவருக்கே வெளிச்சம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!