
தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன்.
தொப்பை வளர்த்தது உண்மைதான் என்றாலும், இது அவர் தற்போது நடித்துவரும் மேப்படியான் என்கிற படத்துக்காக வளர்க்கப்பட்ட தொப்பை ஆகும். அதேசமயம் மூன்றே மாதங்களில் 93 கிலோவில் இருந்து 77 கிலோவுக்கு, அதாவது சுமார் 16 கிலோ எடையை குறைத்து, அந்த தொப்பையை கரைத்து மீண்டும் பழையபடி கட்டுக்கோப்பான உடலமைப்பிற்கு மாறியுள்ள புகைப்படத்தையும் ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார் உன்னி முகுந்தன்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, “இதேபோல உங்களில் யாராவது செய்ய முடியுமா..? உடல் எடையை கூட்டி குறைப்பது உடற்பயிற்சியால் மட்டும் அல்ல, அதற்கு மனப்பயிற்சியும் ரொம்பவே முக்கியம்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!