
தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண்
ராம்சரண் தயாரித்து வரும் ஆச்சார்யா படக்குழுவில், சிரஞ்சீவியின் கேரவன் ட்ரைவராக பணியாற்றியவர், கொரோனா தாக்குதலால் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ராம்சரண், சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.
அதேபோல தற்போது சர்க்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வந்தார் மகேஷ்பாபு. இந்தநிலையில் தனது பர்சனல் ஒப்பனைக்கலைஞர் மற்றும் படக்குழுவினர் சிலர் கொரோரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்ததும், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, கொரோனா சோதனை மேற்கொண்டு தன்னுடையை குடும்பத்துடன் சேர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் மகேஷ்பாபு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!