'சிங் கீதம்' படத்தில் நடிக்க ஆசைப்பட்ட கமல்ஹாசன் | ஓடிடியில் வரவேற்பைப் பெற்றுள்ள 'லீடர்' | அடுத்தடுத்து அறிவிக்கப்படும் புதிய படங்களின் வெளியீடுகள் | ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய கிளாமர் விமர்சனம் : மன்னிப்பு கேட்ட 'பெத்தி' இயக்குனர் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் |

கொரோனாவின் இரண்டு அலைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்த நிலையில், இந்த வருடம் துவக்கத்திலிருந்து மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதன் பாதிப்பிற்கு சில திரையுலக பிரபலங்களும் ஆளாகியுள்ளனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.
கடந்த வருடம் தான் கொரோனா தொற்றால் முதல்முறையாக பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணா அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இரண்டாவது முறையாக' கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது தரப்பில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கோவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு பாலகிருஷ்ணா கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரசிகர்களும் தெலுங்கு திரையுலக பிரபலங்களும் பாலகிருஷ்ணா விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.