
நடிகர் சங்கத்தில் இருந்து திலகனின் மகன் அதிரடி நீக்கம்
சமீபத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகணமன படத்தில் வழக்கறிஞராக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இந்தநிலையில் மலையாள சினிமா நடிகர் சங்கமான "அம்மா"வில் இருந்து தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் ஷம்மி திலகன். நேற்று கூடிய நடிகர் சங்க பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷம்மி திலகன் பெரும்பாலும் நடிகர் சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டு வந்ததால் பலமுறை சங்கத்தால் எச்சரிக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழு கூட்ட வீடியோவை தனது மொபைலில் படம் பிடித்து அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டார் ஷம்மி திலகன். இதுகுறித்து அவரை கண்டித்து நடிகர் சங்கம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது ஆனாலும் அவர் இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை என்பதால் நேற்று கூடிய பொதுக்குழுவில் அவரை சங்கத்திலிருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஒரு சில நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் ஒப்புக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!