அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார்.. அதன்பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் திலீப் மீது விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்ததாக புதிய வழக்கு பதியப்பட்டது.. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார் திலீப்.
கடந்த டிசம்பர் மாதம் துவங்கிய அவரது முன்ஜாமீன் போராட்டம் நீண்ட இழுபறிக்குப் பின் முடிவுக்கு வந்து சமீபத்தில் தான் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது தன் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியப்பட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் திலீப் தற்போது புதிய மனு ஒன்றை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.