'பெண் என்றால் பேய்யும் இறங்கும்' - 'பணம் என்றால் பிணமும் வாய்பிளக்கும்' என்பது பழங்காலம் முதல் இக்காலம் வரையும் நடைமுறையில் இருக்கும் பழமொழிகள். 'அரூபம்' என்பதில் விளக்கம் உருவம் அற்றது, ஒருமனிதன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள்காலத்திற்கு முன்பாக துர்மரணம் அடையும் போது தன் உள்ள இருந்து 'ஆசாபாசங்களை' நிறைவேற்றிக்கொள்ள ஆத்மாவாக அலைகின்றது என்பது நிலவும் கருத்து. இக்கருத்திற்கு ஏற்ப இக்காலகட்டத்தில் நிகழும் பெரும்பான்மையான துர்மரணங்கள் 'பணத்தாசை மற்றும் பெண்ணாசை' -க்காக நிகழப்படுகின்றது என்ற கருத்தை இக்காலகட்டத்திற்கு தேவைப்படும் அனைத்த ரசனைகளையும் சேர்த்து உருவாக்கியுள்ளோம்.
க்ளைமாக்ஸ் காட்சி கொடைக்கானலில் இதுவரை யாரும் செல்லாத மிக உயர்ந்த இடமான 'பல்லங்கி' மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அந்த இடம் காட்டு மிருகங்கள் நடமாடும் பகுதியாகும், அந்த இடத்திற்கு செல்ல சாலை வசதியோ, வாகன வசதியோ இல்லை, இறுதியாக வாகனம் செல்லும் இடத்தில் இருந்து 2 மணி நேரம் கால்நடையாக உச்சிக்கு நடந்து செல்ல வேண்டும். படக்குழுவினர்கள் அனைவரும் படப்பிடிப்பு சாதனங்கள் சுமந்து கொண்டு உச்சிக்கு சென்றனர். அங்கு 3 நாட்கள் தங்கி படப்பிடிப்பு நடத்தினார்கள். இரவு நேரங்களில் மிருகங்கள் நடமாடும் என்பதால் மலை உச்சியிலேயே டெண்ட் அடித்து படக்குழுவினர் அனைவரும் தங்கிபடப்பிடிப்பை முடித்தனர்.
ராணா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தேவா கதாநாயகனாகவும், தர்ஷிதா, சஹானா கதாநாயகிகளாகவும் அறிமுகமாகியுள்ளனர். சரண், ஜெகன், ஏ.கே. ராஜேந்தினர், விஜயலட்சுமி, குள்ளமணி, தேனி முருகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தயாரிப்பு - டாக்டர் ஜி. யுவபாலகுமரன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பி. வின்சென்ட் ஜெயராஜ்
இவர் நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க கொடைக்கானலில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது. ஜனவரி 2ல் வெளிவருகிறது.