பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை | சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு | நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி |
சீரியல் தயாரிப்பிலும், ஒளிபரப்பிலும் மற்ற தொலைக்காட்சிகளை ஒப்பிடும்போது ராஜ் டி.வி பின்தங்கியே இருந்தது. ஆனால் இப்போது ராஜ் டி.வி புதிய தொடர்களை ஒளிப்புவதில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.வருகிற 28ந் தேதி முதல் 5 புதிய தொடர்களை ஒளிபரப்புகிறது. இந்த தொடர்கள் திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகிறது.
இரவு 7 மணிக்கு கடல் கடந்து உத்யோகம் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. பெற்றவர்களை இங்கு தவிக்க விட்டவிட்டு வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளை பற்றிய தொடர். 7.30 மணிக்கு கங்காதரனை காணோம் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஒரு ஆணை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் தொடர் இது. அடுத்து 8 மணிக்கு கண்ணம்மா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது.
இது வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் ஒரு பெண்ணின் கதை. 8.30 மணிக்கு ஹலோ சியாமளா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. ஒரு இளம்பெண் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய தொடர். 9 மணிக்கு நலம் நலமறிய ஆவல் என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. குடும்பங்களில் நடக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை கொண்ட தொடர்.