மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழ் சினிமாவில் குணசித்ர நடிகராக இப்போதும் இருப்பவர் ராஜேஷ். கன்னி பருவத்திலே படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜேஷ், அதன் பிறகு தனி மரம், தை பொங்கல், நான் நானேதான், அச்சமில்லை அச்சமில்லை, சிறை படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த 7 நாட்கள் படம் அவரை நல்ல குணசித்ர நடிகராக அடையாளம் காட்டியது.
அதன் பிறகு பயணங்கள் முடிவதில்லை, தனிக்காட்டு ராஜா, மெட்டி, தாய் வீடு, ஆட்டோகிராப் உள்பட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு குறைந்ததும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தார். ஓட்டல் நடத்தினர். சின்னத்திரையிலும் நடித்தார். தாயம், முடிவல்ல ஆரம்பம் தொடர்களில் நடித்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ரோஜா என்ற தொடரில் நடிக்கிறார். விபத்தொன்றில் மனைவியையும் மகளையும் இழந்து விட்டு அன்புக்கு தவிக்கிற தந்தையாகவும், அனாதை ஆசிரமத்தில் வளரும் ஒரு இளம் பெண்ணுக்கு வக்கிலாகவும் வாழ்கிற கேரக்டரில் நடிக்கிறார்.