தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் |
ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. வித்தியாசமான கதை களத்தை கொண்ட தொடராக இது உருவாகி ஒளிபரப்பாக இருக்கிறது.
சராசரிக்கும் கூடுதலாக குண்டான பெண் ராசாத்தி. அன்பானவள், தைரியமானவள் என்றாலும் தன் மகளின் தோற்றத்தால் அவளுக்கு எப்படி திருமணமாகும், அவள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று கவலை கொள்கிறார் தாயான செண்பகவல்லி. ஆனால் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுகிறது. ராசத்தி கபடி வீரர் இனியனை திருமணம் செய்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதுதான் தொடரின் கதை.
இதில் ராசாத்தியாக புதுமுகம் அஸ்வினி நடிக்கிறார், அவரது தாய் செண்பகவல்லியாக சபீதா ஆனந்த் நடிக்கிறார், ராசாத்தி கணவர் இனியனாக வசந்த் நடிக்கிறார். ஆர்.தேவேந்திரன் இயக்குகிறார். ஜானி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.