செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த படம் மகளிர் மட்டும், ஜோதிகா, சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, லிவிங்ஸ்டன், நாசர், பாவல் நடித்த இந்தப் படத்தை குற்றம் கடிதல் பிரம்மா இயக்கியிருந்தார். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தங்களின் சுதந்திரத்தை இழந்து கணவனின் அடிமைகளாக இருக்கும் குடும்ப பெண்கள் நான்குபேரை ஆவணப்படத் தயாரிப்பாளர் ஜோதிகா சுதந்திரமாக டூர் அழைத்துச் சென்று அவர்களுக்குள் இருக்கும் சுதந்திர உணர்வை வெளிப்படுத்திய படம். நடுத்தர பெண்களுக்கான தேடல், அவர்களின் கனவுகளை சொன்ன படம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தை ஜீ தமிழ் சேனல், புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்புகிறது. ஜனவரி 1ந் தேதி மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.