செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரித்த படம் ரங்கூன். கவுதம் கார்த்திக், சனா மக்புல், டேனியல், சித்திக் உள்பட பலர் நடித்திருந்தார்கள். அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார்.
சென்னையிலிருந்து பர்மாவுக்கு தங்கம் கடத்துபவர்களின் கதை. பர்மா தமிழர்களின் வாழ்வியல் படம். ஆக்ஷ்ன் த்ரில்லராக வெளிவந்து ஓரளவுக்கு வரவேற்பை பெற்ற படம். கவுதம் கார்த்திக் கேரியரில் திருப்பம் தந்த படம். கடந்த ஜூன் மாதம் வெளிவந்த இந்தப் படம் விஜய் டி.வியில் புத்தாண்டு சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகிறது. புத்தாண்டு அன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.