டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? |
சரவணன் மீனாட்சி புகழ் செந்தில்-ஸ்ரீஜா ஜோடி மீண்டும் நடித்து வரும் தொடர் மாப்பிள்ளை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் இன்னொரு ஜோடியாக நடிப்பவர்கள் கமல்-ஜனனி. இவர்களது ரொமான்ஸ் காட்சிகள் சினிமாவுக்கு இணையாக படமாக்கப்பட்டு வந்தது. முக்கியமாக 5 முத்தக்காட்சிகளில் அவர்கள் நடித்தனர்.
ஆனால் அப்படி நடித்த அவர்களது கதாபாத்திரங்கள் தற்போது எதிரும் புதிருமாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, தனது காதலனுக்கே வில்லியாகி விட்டார் ஜனனி. இதேபோல் இன்னும் இந்த மாப்பிள்ளை தொடர் பல அதிரடி திருப்பங்களை சந்திக்க இருக்கிறதாம்.
இதுபற்றி மாப்பிள்ளை கமல் கூறும்போது, இந்த சீரியலில் நடித்தது எனக்கு சினிமாவில் நடித்தது போன்றே இருந்தது. முக்கியமாக, எனக்கு ஜோடியாக நடித்துள்ள ஜனனி, முத்தக்காட்சிகள் நடிக்க சம்தம் சொன்னது பெரிய விசயமாக இருந்தது. சீரியல்களில் அந்த மாதிரி நடிக்க பலரும் தயங்கும் நிலையில், அவர் கேசுவலாக எடுத்துக்கொண்டு நடித்தார். அது பெருவாரியான நேயர்களை கவர்ந்தது.
தற்போது அப்படி என்னை உயிருக்கு உயிராக காதலித்த ஜனனியே தற்போது எனக்கு எதிரியாகி விட்டார். இது கதையில் மட்டுமின்றி எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன்பு நடித்த எபிசோடுகளில் ஜனனியின் முகத்தை பார்க்க ஆவலாக இருந்த நான், இப்போது அவரது முகத்தை பார்க்கவே பயப்படுகிறேன். அந்த அளவுக்கு கொடூரமாக விட்டார் அவர்.
மேலும், அடுத்தபடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீலி தொடரிலும் சூர்யா என்ற ஒரு துப்பறிவாளன் வேடத்தில் நடிக்கிறேன். மாப்பிள்ளை சீரியலில் இருந்து மாறுபட்ட வேடம். அதனால் இந்த சீரியலுக்காக வித்தியாசமான பர்பாமென்ஸ் கொடுத்து வருகிறேன் என்கிறார் சின்னத்திரை கமல்.