ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் போன்ற பெரிய பட்ஜெட் ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் தருவதைப்போன்று புதிய புதிய நேரடி தமிழ் தொடர்களுக்கும் முக்கியத்தும் தருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது ராஜா ராணி என்ற தொடர்.
புகழ்பெற்ற திரைப்படத்தின் தலைப்புகளை சீரியல்களுக்கு வைப்பது பேஷன் என்பதால் இதற்கு ஆர்யா, நயன்தாரா நடித்த வெற்றிப் படமான ராஜா ராணி தலைப்பு வைத்திருக்கிறார்கள். வருகிற மே மாதம் 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. ஒரு புதிய தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாவது மிகவும் அபூர்வம். அது ராஜா ராணிக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில் வேலைக்காரியாக செல்லும் ஹீரோயினை அந்த வீட்டு செல்லப் பிள்ளையான ஹீரோ காதலிக்கிறார். செல்லப்பிள்ளையின் காதலை மறுக்க முடியாமல் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர், மகனை கொண்டே மருமகளை விரட்ட சதி திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டங்களை ஹீரோயின் சாதுர்யமாக எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள். சீரியலின் கேப்சனும் ஒரு பணிப்பெண் மருமகளான கதை என்றே வைத்திருக்கிறார்கள்.