இந்த உலகில் யாரும் சுயமாக உருவாக்கப்படுவது இல்லை : சல்மான் கான் பேட்டி | அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் |
இந்தியில் 2011முதல் 2016 வரை ஒளிபரப்பான மெகா சீரியல் தியா ஆர் பாத்தி ஹம். ரோகித் ராஜ் கோயல் என்பவர் இந்த தொடரை இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் தீபிகா சிங். இந்த தொடரில் பணியாற்றி வந்தபோது இயக்குனர் ரோகித் ராஜ் கோயலுக்கும், தீபிகா சிங்கிற்குமிடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு சீரியல் நிறைவு பெற்றதை அடுத்து கர்ப்பமான தீபிகா சிங்கிற்கு, மே 20-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரோகித் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியில் ஏராளமான ரசிகர் ரசிகைகளை கொண்டுள்ள தீபிகா சிங், அடுத்து மீண்டும் நடிக்க வருவாரா? இல்லை முழுநேர குடும்பத்தலைவியாகி விடுவாரா? என்கிற கேள்விகள் பாலிவுட்டில் எழுந்திருக்கிறது.
மேலும், இந்தியில் தீபிகா சிங் நடித்த தியா ஆர் பாத்தி ஹம் என்ற அந்த தொடர் பின்னர் தமிழில், என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.