தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
பல வருடங்களுக்கு முன்பு தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் கர்ணனின் மனைவியாக சிறிய கேரக்டரில் நடித்த கவிதா, அதன் பிறகு தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்து விட்டு தமிழுக்கு திரும்பியிருக்கிறார். நீலி தொடரின் வில்லி அவர்தான்.
மனைவியை இழந்த கணவன் தன் மகள் அபியோடு வசிக்கிறார். மகளுக்கு பிடித்தமான பொம்மை ஒன்றில் இறந்த அம்மாவின் ஆவி இருக்கிறது. அது குழந்தையை பாதுகாத்து வளர்க்கிறது. கணவன் மறுமணம் செய்து கொள்ள.. மனைவியா வந்தவள் குழந்தை அபியை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கிறாள். அவளிடமிருந்து குழந்தையை பொம்மைக்குள் இருக்கும் அம்மா ஆவி எப்படி காப்பாற்றுகிறது என்கிற கதை. இதில் கொடுமைக்கார சித்தி ரேகாவாக கவிதா நடிக்கிறார்.
"நான் முதன் முறையாக நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேன். அதுவும் குழந்தையை கொடுமைப்படுத்தும் கொடுமைக்கார சித்தியாக. நிச்சயம் எனது கேரக்டரை பெண்களுக்கு பிடிக்காது, திட்டி தீர்க்கப்போகிறார்கள். அதுதான் என் நடிப்பின் வெற்றி. தமிழ் சீரியலில்தான் அறிமுகமானேன். மீண்டும் தமிழில் நடிக்கும் ஆர்வத்தில் இருந்தேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது" என்கிறார் கவிதா.