மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
விஜய் டி.வியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று குற்றம் நடந்தது என்ன? தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் புலனாய்வு நிகழ்ச்சி. இதை காப்பி அடித்து மற்ற சேனல்கள் வெவ்வேறு பெயர்களில் இது போன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. தற்போது இதே நிகழ்ச்சி நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற பெயரில் இரண்டாவது சீசனாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. கடந்த 29ந் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சமீப காலமாக உளவியல் ரீதியான குற்றங்கள் பெருகி வருகிறது. குறிப்பாக பாலியல் தொடர்பான கொலைகள், பேஸ்புக், டுவிட்டர் தொடர்பான கொலைகள். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள். இந்த குற்றங்களின் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
"இந்த நிகழ்ச்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட உண்மை சம்பவங்களின் புலன் விசாரணைகளை அடிப்படையாக கொண்டது. இந்த நிகழ்ச்சி மூலம் எந்த ஒரு தீர்வும் அறிவிக்கப்படவில்லை. மற்றும் இந்த நிகழ்ச்சியின் எந்த ஒரு பகுதியையும், காட்சியையும் ஆதாரமாக பயன்படுத்தினால் அதற்கு விஜய் டி.வி பொறுப்பேற்காது. நிகழ்ச்சியின் உள்ளடக்கம், மற்றும் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு விஜய் டி.வி பொறுப்பு" என்று சேனல் அறிவித்துள்ளது.