மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? | பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' விரைவில் ஆரம்பம் | சர்வதேசப் படமாகவே இருக்கும் : அல்லு அர்ஜுன் தந்த அப்டேட் | விஜே சித்துவின் டயங்கரம் | ஒவ்வொரு இந்தியன் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் ; நடிகர் சோனு சூட் வேதனை | புகை பிடித்தல் மற்றும் மதுவுக்கு எதிரான வாசகங்கள் படம் பார்க்கும் மூடை கெடுக்கிறது : அனுராக் காஷ்யப் | வசூல் சண்டையை ஆரம்பித்த 'ஹிட் 3' : பதிலடி கொடுத்த 'ரெட்ரோ' | சிம்பு, சந்தானம் இணையும் படம் நாளை படப்பூஜை | டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? |
சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறவர் தியா மேனன். கேரளத்தில் பிறந்து குன்னூரில் வளர்ந்து, கோயம்புத்தூரில் படித்து சென்னையில் தொகுப்பாளினி ஆனவர். சீரியலில் நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்தவர். தற்போது 'மகான் கணக்கு' என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த மாத இறுதியில் தியா மேனனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. வருங்கால கணவர் சிங்கப்பூரில் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சிங்கப்பூரில் செட்டிலாக இருக்கிறார் தியாமேனன். வருங்கால கணவரும் சிங்கப்பூர் சேனல் ஒன்றில் வருங்கால மனைவிக்காக ஒரு தொகுப்பாளினி வேலையும் தயார் செய்து வைத்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் இனி சிங்கப்பூர் மக்களை மகிழ்விக்க இருக்கிறார். இருந்தாலும் அடிக்கடி சென்னை பறந்து வந்து இங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் முடிவு செய்திருக்கிறார். தொகுப்பாளினி தவிர அவர் எம்.பி.ஏ படித்திருப்பதால் விரைவில் ஒரு பிசினஸ் ஒன்றையும் துவங்க இருக்கிறார்.