துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இளம் தலைமுறை காதலர்களாக நடிப்பவர்கள் அன்வரும், சமீராவும். சீரியலில் சீரியசாக காதலிக்கும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலர்களாகி விட்டார்கள்.
தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமீரா 'பகல் நிலவு' மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார், அன்வர் தமிழில் ஏராளமான சீரியலில் நடித்தவர். “நான் நடிகர் என்றாலும் சமீராவின் நடிப்புக்கு நான் ரசிகன். ஒரு ஷாப்பிங் மாலில்தான் முதல் முதலில் சந்தித்தோம். பிறகு நண்பர்களானோம் பின்பு அதுவே காதலானது என்கிறார் அன்வர். நிஜ காதலர்களே சீரியல் காதலர்களாக இருப்பதால் காதல் காட்சிகளில் தனி கவனம் செலுத்துகிறது சீரியல் கதை இலாக்கா.