பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

பிரபல இணையதள டிவி சேனல் யூப்-டிவி. காலத்திற்கு தகுந்தவாறு தன்னுடைய தொழில்நுட்பத்தை விரிவுப்படுத்தும் யூப்-டிவி, ரசிகர்களின் தேவையை அறிந்து நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட ஆசிய கோப்பை டுவென்டி-20 போட்டிகள் நடந்தபோது அதை ஒளிப்பரப்பு செய்தது. இந்நிலையில் இப்போது படங்களையும் ஒளிப்பரப்பு செய்ய தொடங்கியுள்ளது.
சமீபத்தில், நாகர்ஜூனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் தமிழில் 'தோழா' என்ற பெயரிலும், தெலுங்கில் 'ஊப்பரி' என்ற பெயரிலும் படமாக வெளிவந்தது. வம்சி இயக்கிய இப்படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது. இப்படங்களை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் யூப்-டிவி இணையதளம் டிஜிட்டலில் அதிக தரத்துடன் வெளியிட்டுள்ளது. இதை யூப்-டிவி இணையதளம் வாயிலாகவோ அல்லது யூப்-டிவியின் ஸ்மார்ட் டிவி, ஆப் போன்றவற்றிலும் இப்படத்தை காணலாம்.
இதுகுறித்து யூப்-டிவியின் தலைமை அதிகாரி உதய் ரெட்டி கூறுகையில், ''யூப்-டிவி இணையதளம் எப்போதும் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. அதன்படி இந்த படமும் ரசிகர்களை நிச்சயம் கவரும். யூப்-டிவியின் அனைத்து பிளாட்பார்மிலும் இதை காணலாம் என்று கூறியுள்ளார்.