டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' |
நாதஸ்வரம் தொடரில் அறிமுகமானவர் ஸ்ரீத்திகா. அந்த தொடருக்காக இயக்குனர் திருமுருகன் நடிகர் நடிகைளை தமிழ்நாடு முழுவதும் இண்டர்வியூ செய்து தேர்ந்தெடுத்தபோது தேர்வானவர். அதன்பிறகு மாமியார் தேவை, உறவுகள் சங்கமம், வைதேகி, உயிர்மை, தொடர்களில் நடித்தார் தற்போது குலதெய்வம் தொடரில் நடித்து வருகிறார். இடையில் சினிமா பக்கம் சென்று வந்தார். மதுரை டூ தேனி, வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.
தற்போது ஸ்ரீத்திகாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள். சொந்தக்கார மாப்பிள்ளைதானாம். இதுநாள் வரை திருமணத்துக்கு கிரீன் சிக்னல் கொடுக்காததால் காத்திருந்த பெற்றோர் இப்போது திருமண ஏற்பாடுகளில் பிசியாகி விட்டார்கள். இந்த ஆண்டிற்குள் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. மாப்பிள்ளை சினிமா, தொலைக்காட்சி, மீடியாக்களின் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்டவராம். திருமணத்துக்கு பிறகும் குலதெய்வம் நடிப்பு தொடரும் என்கிறார்கள்.