டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் யார் தெரியுமா? | விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' |
ஜீ தமிழ் சேனலில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு 'சிம்ப்ளி குஷ்பு' என்ற நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களிடம் பேட்டி கண்டு வருகிறார் நடிகை குஷ்பு. மற்ற சேனல் பேட்டிகளில் இருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக சில புதுமைகளையும் அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில புதுமைகளையும் செய்து வருகிறார்.
குறிப்பாக, வருகிற சனிக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கும் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் மாதவனிடம் பேட்டி எடுக்கும் அவர், அலைபாயுதே படத்தில் ஷாலினியிடம் அவர் பேசிய, நான் உன்னை விரும்பல, எம் மேல ஆசைப்படல, ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு என்ற வசனத்தை மாதவன் மீண்டும் பேச வைத்து கேட்பதோடு, அவரிடம் சென்று கன்னத்தில் ஒரு முத்தமும் பெறுகிறார். இதை ப்ரமோ தற்போது வெளியாகி வரும் நிலையில், குஷ்புவும் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.