விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி |
செல்லமே, முகூர்த்தம், மாதவி உள்பட சில தொடர்களில் நடித்து வருபவர் சோனியா. சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் நடித்து வரும் இவர், மேற்படி இரண்டு துறைகளிலும் இரண்டு பதவி வகித்து வருகிறார். அதாவது, நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது அதில் செயற்குழு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டு அதில் வென்றார் சோனியா. அதையடுத்து சமீபத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோதும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆக, ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகித்து வருகிறார் சோனியா.
இதுபற்றி அவர் கூறுகையில், ''நான் தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். தமிழைப்பொறுத்தவரை ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை தொடங்கி சமீபத்தில் வெளியான ஈட்டி வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளேன். அதேபோல் பல மெகா சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதனால் என்னை சினிமா-சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் எல்லோருக்குமே நன்றாக தெரியும். அதனால்தான் இரண்டு சங்க தேர்தல்களிலுமே போட்டியிட்டேன். அப்படி போட்டியிட்டு இரண்டு மீடியாக்களிலும் வெற்றி பெற்றேன். என்னதான், நடிப்பில் பிசியாக இருந்தாலும், பொறுப்பை உணர்ந்து சம்பந்தப்பட்ட பணிகளையும் செவ்வனே செய்து வருகிறேன்'' என்கிறார் சோனியா.