விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா-நானா நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமாகியிருக்கிறது. ஒரே துறையைச்சேர்ந்த மாற்றுக் கருத்துள்ளவர்களை இரண்டு அணிகளாக உட்கார வைத்து அவர்களிடம் கருத்து கேட்பது. குறிப்பாக, சமூக பிரச்னைகளை அலசும் இந்த நிகழ்ச்சியில் வருகிற பொங்கல் தினத்தன்று விஜய்-அஜீத் ஆகிய இரண்டு நடிகர்களின் ரசிகர்களை எதிரெதிரே உட்கார வைத்து நீயா நானாவை காரசார விவாத மேடையாக்கியிருக்கிறாராம் கோபிநாத்.
இதற்கு முன்பு மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நேயர்களை விட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் தங்களது அபிமான ஹீரோக்களின் அருமை பெருமைகளை அடுக்குமொழியில் அள்ளி விட்டுள்ளார்களாம். அதோடு அவர்களின் விவாதத்தில் ஆவேசம் நிறைந்திருந்தாம். அதன்காரணமாக இதுவரை எந்த நீயா-நானா நிகழ்ச்சிகளுக்கும் இல்லாத அளவுக்கு சூடு பறந்ததாம் விவாதம்.
அதேசமயம் கடைசியில் இரண்டு நடிகர்களைப்பற்றிய தீர்ப்பு சொல்லப்படும்போது, அவர்களின் ப்ளஸ் பாய்ண்டுகளையும், அவர்கள் ரசிகர்களை எந்தெந்த வகையில் கவர்ந்துள்ளார்கள் என்பதையும் அழகாக சொல்லி நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறார்களாம்.