விராட் கோலியாக எஸ்டிஆர், அனுஷ்கா சர்மாவாக திரிஷா? | மீண்டும் ரஜினி, சுந்தர்.சி கூட்டணி? | பல ஆண்டுகளுக்குபின் பேட்டி கொடுத்த விஜய், அஜித் : இந்த மாற்றம் தொடருமா? | ரூ.100 கோடியை தொடுமா ரெட்ரோ? | தொடரும் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் | பிளாஷ்பேக் : வில்லன் இமேஜை உடைத்து காட்டுவோம்: கார்த்திக்குடன் டீல் பேசிய ஏவிஎம் | மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம் | 'கயல்' அமுதா தற்கொலை முயற்சி? | பிளாஷ்பேக் : கவனிக்கப்பட்டாத 'திருமழிசை ஆழ்வார்' | ஹிட் 3 : முதல் நாள் வசூல் 43 கோடி |
எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி பூஜா. அவ்வப்போது சினிமாவிலும் தலை காட்டுவார். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான் பூஜா. தொகுப்பாளியான பிறகு ஹீரோயின்களின் தோழி, ஹீரோவின் தங்கை என்று சிறு சிறு வேடங்களில் நடித்தார். காதலில் சொதப்புவது எப்படி படம்தான் முதல் படம். அதில் அமலாபாலின் தோழியாக நடித்தார்.
தனது 5 வருட தொகுப்பாளினி பணியை முடிவுக்கு கொண்டு வந்து விட்டு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விரைவில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம் என்ற தெரிகிறது. "புதுமைப் பெண் ரேவதி மாதிரி, குக்கூ மாளவிகா மாதிரியான வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க ஐ எம் வெயிட்டிங்" என்கிறார் பூஜா.