நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
சினி டைம்ஸ் எண்டர்டெய்மென்ட் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் கேளடி கண்மணி. ஓ.என்.ரத்னம் இயக்கி வரும் இந்த தொடரில் அர்ணவ், கிருத்தியா கிருஷ்ணன், சாதனா, சாந்தி வில்லியம்ஸ், ராமச்சந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இதில் நாயகனாக நடித்து வரும் அர்ணவ் பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டுவிதமான நடிப்பையும் வெளிப்படுத்தி கைதட்டல் பெற்று வருவதால், அவரை அடுத்தபடியாக மெகா சீரியல்களில் புக் பண்ண சில நிறுவனங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அர்ணவ், கேளடி கண்மணி தொடரை தவிர புதிய தொடர்களில் கமிட்டாகும் ஐடியா இல்லை என்று தவிர்த்து வருகிறார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன். ஆனால் சினிமா வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. அதனால் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் வரை சீரியல்களில் நடித்து திறமையை வளர்த்துக்கொள்வோம் என்றுதான் கேளடி கண்மணி சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறேன். ஆனால், எனக்கு மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளது. மீதமுள்ள 20 நாட்களும் ஓய்வாகத்தான் இருக்கிறேன். அதனால் இந்த இடைவெளியில் சினிமாவில் என்ட்ரியாகி விட வேண்டும் என்றுதான் படங்களுக்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன்.
மேலும், இந்த நேரத்தில் பல சீரியல்களில் கமிட்டாகி விட்டால், சினிமாவில் நடிக்க நேரம் இல்லாமல் போய்விடும். அதனால்தான் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும், இப்போதைக்கு கேளடி கண்மணி ஒன்றே போதும் என்று தேடி வரும் சீரியல் வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன் என்கிறார் அர்ணவ்.