ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி |
கலைஞர் டிவியில் இன்று (நவம்பர் 2-ந்தேதி) முதல் புதிய மெகா தொடர் கண்ணம்மா வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடர் பழிவாங்கும் கதையில் உருவாகிறது. அதாவது, தனது கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீனிவாஸ் என்பவன் பண மோசடி செய்ததாக அவனை வேலையில் இருந்து நீக்குகிறார் தொழிலதிபர் சங்கர நாராயணன். இதையடுத்து அவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவரது மகள் கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்யும் ஸ்ரீனிவாஸ், நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகு கண்ணம்மாவை தவிக்க விட்டு பழிதீர்க்கிறான்.
இதையடுத்து கண்ணம்மா என்னென்ன நடவடிக்கை எடுக்கிறாள் என்பதுதான் இந்த தொடரின் கதையோட்டம். முற்றிலும் குடும்ப பின்னணியில் உருவாகும் இந்த கண்ணம்மா தொடரில் சோனியா லீடு ரோலில் நடிக்கிறார். அவருடன் பொள்ளாச்சி பாபு, கிருத்திகா, ராஜசேகர், சுமங்கலி, அழகு உள்பட பலர் நடிக்கின்றனர். என்.கிருஷ்ணசாமி கதை திரைக்கதை வசனம் எழுத, மூலக்கதை எழுதி இயக்குகிறார் வேதபுரி மோகன். என்.எஸ்.பாலசுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்ய, மரியா மனோகர் இசையமைக்கிறார்.
வேல் மீடியா தங்கவேல் தயாரித்துள்ள கண்ணம்மா தொடரின் டைட்டீல் பாடலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் பாடியுள்ளார்.