தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத அங்கமாக இருந்தவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடித்தவர். அதிகம் பேசாதவர், அதிக சர்ச்சைகளில் சிக்காதரவர், தெய்வ பக்தி நிறைந்தவர். தான் உண்டு. தன் வேலையுண்டு என்ற இருப்பவர் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தன் காலம் முடிந்து விட்டது என்று ஒதுங்கி இருக்காமல் அம்மா கேரக்டர், அண்ணி கேரக்டரில் நடித்து, சின்னத்திரையிலும் கால்பதித்தவர்.
சரிகம நிறுவனம் தயாரித்த ராஜ ராஜேஸ்வரி தொடரில் நடித்தவர் அதன் பிறகு சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது அதே சரிகம இண்டியா நிறுவனம் தயாரிக்கும் பைரவி தொடரின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இந்த தொடர் ஞாயிறு தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது திகில் தொடர்தான் என்றாலும் கே.ஆர்.விஜயாக நடிப்பது தெய்வாம்சம் நிறைந்த ஒரு பகுதியில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"நடிப்பு எனக்கு சுவாசம் மாதிரி. அது இல்லாமல் என்னால் வாழ முடியாது. வீட்டில் எனக்கென்று சில பொறுப்புகள் இருந்தது. அதனால் சில காலம் கொஞ்சம் விலகி இருந்தேன். முன்பு ராஜ ராஜேஸ்வரி தயாரித்த அதே நிறுவனம் நடிக்க அழைத்துபோது வந்து விட்டேன். இந்த நிறுவனம் எனக்கு பழக்கமானது. நல்ல தயாரிப்பாளர், இயக்குனர். ஸ்கிரிப்டிலேயும் சரி, அதை காட்சிப்படுத்துவதிலேயும் சரி சரியாக செயல்படுகிறவர்கள். அதனால் நான் நடிக்க வந்திருக்கிறேன். கடைசி மூச்சு உள்ளவரை நடிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை கடைசிவரை நடித்துக் கொண்டே இருப்பேன்" என்கிறார். கே.ஆர்.விஜயா.