செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
செப் 8-ம் தேதி முதல் விஜய் டி.வியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ஆண்டாள் அழகர். இது மண்மனக்கும் கிராமிய தொடர். காரைக்குடி பகுதியில் உள்ள செட்டிநாட்டு கிராமிய கலாச்சாரத்தோடு சொல்லப்படுகிற காதல், செண்மெண்ட் கதை. கல்யாணி, பாலா, ரம்யா, ஸ்டாலின் நடிக்கிறார்கள். கதிரவன் இயக்குகிறார்
"இந்த தொடர் பாரதிராஜா சார் பாணியில் சொல்லப்படும் அழகான கிராமத்து காதல் கதை. மண்மனம் மாறாத கிராமத்து கலாச்சாரத்தின் பதிவாக இருக்கும்" என்றார் இயக்குனர் கதிரவன்.
இந்த தொடரின் புரமோஷன் பாடலாக இளையராஜாவின் "அம்மன் கோவில் கிழக்காலே அன்ன வயல் மேற்காலோ..." என்ற பாடல் பயன்படுத்ததப்படுகிறது. அதேபோல படத்தின் முக்கியமான காட்சிகளில் புகழ்பெற்ற இளையராஜாவின் பின்னணி இசையை பயன்படுத்துகிறார்கள்.