மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? |
பிரபல தொழில் அதிபரும் காங்கிரஸ் பிரமுகருமான வசந்தகுமார் நடத்தி வரும் சேனல் வசந்த் தொலைக்காட்சி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் தம் பிடித்து நின்று கொண்டிருக்கிற டி.வி. சில தொடர்கள், பழைய பாடல்கள், தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இப்போது வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து 24 மணி நேர செய்தி சேனல் ஒன்று விரைவில் வர இருக்கிறது.
இதுபற்றி அதன் நிறுவனர் வசந்தகுமார் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் கட்சிக்கென தனி சேனல் கிடையாது. இந்தியாவிலேயே முதன் முறையாக நான்தான் எனது சொந்தப் பணத்தில் இந்த சேனலை ஆரம்பித்தேன். லாபகரமாக இல்லாவிட்டாலும், கட்சிக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் நடத்தி வருகிறேன். விரைவில் 24 மணி நேர செய்தி சேனல் ஒன்றையும் தொடங்க இருக்கிறேன்" என்கிறார் வசந்தகுமார்.