குட் பேட் அக்லி டிரைலர் இன்று வெளியாகிறது | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் பரத் கூறியுள்ளார். கிசுகிசுவில் அடிபட்டுக் கொண்டிருக்கும் நடிகர்களின் முக்கியமானவர் நடிகர் பரத். இவர் நடித்த திருத்தணி படம் விரைவில் வரவிருக்கிறது. இதை விட இவர் பெரிதாக நம்புவது சசி இயக்கி வரும் 555 படத்தைத்தான். கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தை சுற்றி பரத் பற்றிக் கிளம்பியுள்ள லேட்டஸ்ட் கிசுகிசு நடிகை சஞ்சனாவுக்கும், இவருக்கும் காதல் என்பதுதான்.
இந்த கிசுகிசுக்களை மறுத்துள்ள பரத், இந்த கிசுகிசுவில் உண்மை எதுவும் இல்லை. உண்மையில் நான் நிறைய பெண்களுடன் பழகுகிறேன். ஆனால் யாருடனும் காதல் இல்லை. இவர்கள் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் என்னுடன் நடித்த சீனியர் நடிகை ஒருவருடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள். இதற்கெல்லாம் மறுப்பு சொல்வது வீண் வேலை. எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். இன்னும் எனக்கான இடத்துக்காக போராடிக்கொண்டிருக்கிறேன், என்று கூறியுள்ளார்.