சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
பழம்பெரும் நடிகர் பெரியகருப்பு தேவர், சென்னையில் நேற்று, மாரடைப்பால் இறந்தார். இவருக்கு வயது,78. " பூ, விருமாண்டி, சிவகாசி, திருப்பாச்சி உட்பட, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கலைமாமணி விருது பெற்றுள்ளார். சென்னை சாலிகிராமத்தில், அவர் வீட்டில், நேற்று மாலை, 4:00 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார். இவர் உடலுக்கு, திரையுலகத்தினர் பலர், அஞ்சலி செலுத்தினர். இவருக்கு, அன்னம்மாள் என்ற மனைவியும், நான்கு மகன்களும் உள்ளனர். பெரியகருப்பு தேவரின் உடல், சென்னையிலிருந்து நேற்று இரவு, அவரது சொந்த ஊரான, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள, கருமாத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று, இறுதிச் சடங்கு நடக்கிறது.