குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
நடிகர் ஜெயம் ரவி, நடிகை ராக்ஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்தப் படம் 'அடங்க மறு'. கடந்த 21ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன; அதனால், படத்தில் இருந்து அப்படிப்பட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டு, வழக்கறிஞர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதிகள், வரம் ஜனவரி 2வது வாரத்துக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர். இதனால், சிக்கலில் இருந்து அந்தப் படம் தப்பித்தது. காரணம், ஜனவரி இரண்டாவது வாரம் பொங்கல் வருகிறது.
பொங்கலை ஒட்டி 'விஸ்வாசம்', 'பேட்ட' உள்ளிட்ட பல படங்கள் ரிலீசாகின்றன. அதற்காக, பல தியேட்டர்களில் இயற்கையாகவே 'அடங்க மறு' படம் தூக்கப்பட்டு விடும். அதுவரை தான், 'அடங்க மறு' படமே ஓடும் என்பதே யதார்த்தமாக இருப்பதால், அதன்பின், என்ன தீர்ப்பு வந்தாலும், 'அடங்க மறு' படத்துக்கு பாதிப்பு இருக்காது.