மே 23ல் ‛படை தலைவன்' ரிலீஸ் | பிளாஷ்பேக்: தொடர்கதையாக வந்து பின் சினிமாவான “தியாக பூமி” | தனது கனவுப்படமான 'மகாபாரதம்' அப்டேட் கொடுத்த ராஜமவுலி | மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா | 70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் | அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' |
காற்று வெளியிடை படத்திற்க பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் செக்கச்சிவந்த வானம். அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக உருவாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்களை தினம் ஒன்றாக வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நாளை (ஆக., 25, சனிக்கிழமை) காலை 10 மணியளவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சமூக பிரச்னையை மையமாக வைத்து உருவாகி உள்ள செக்கச்சிவந்த வானம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். செப்., 28-ல் படம் ரிலீஸாகிறது.